என் தாத்தாவும் வாழ்ந்தார் இறந்தார்

எத எதேயோ
சாதிக்கலாமுனு நெனச்சி
ஒன்னும் முடியல

குழந்தையாய்  தவழ் ந்தபோது
நான் ஓடி வந்தால்  ஓடி வரும்
நிலா
சூரியனும் தான் ...

நாளாக நாளாக
நான் மட்டுமே
ஓடி கோண்டிருக்கிறேன் ...

பணக்காரனும்
அரசியல் வாதிகளும்
ரவுடியும்
எனக்கு முன்னால்
எமன்கள்

படிகிறதுலேயே 
கால் நூற்றாண்டு
கழிஞ்சிட்டா ?


உலகத்த  இல்ல
உள்ளுர்ல ஒரு புல்லக்கூட
புடுங்க முடியாது

என் தாத்தாவும் வாழ்ந்தார்
இறந்தார்
என் அப்பாவும் வாழ்கிறார்


நானும்...                               
சுதந்திரம் என்றால் என்ன . சுதந்திரம் யார் யாருக்க அளித்தது . சுதந்திரம் யாருக்காக பெறப்பட்டது . சுதந்திரத்தின் உண்மையான பொருள் என்ன . இதுபோன்று சுதந்திரம் தொடர்பான பல கேள்விகள் இந்திய பிஜைகளிடம் மிக சாதாரணமாக  எழுந்து வருகிறது . இந்திய அரசு சுதந்திரம் என்பதை என்னவென்று தெளிவு படுத்த வேண்டும் . 
                  
                                              சுதந்திரம் என்பது நாடு , மண் , நிலம் , நீர் , காற்று உள்ளிட்ட எல்லாம் எல்லோருக்கும் பொதுவானது .யாரும் யாருக்கும் அடிமை இல்லை . பேச்சு , எழுத்து துறையின்  வாயிலாக  தனது கருத்தை தெரிவிக்க முழு உரிமை உண்டு . அதோடு ஆட்சிக்கு வரும் நபர்கள் ஒவொரு தனி மனித உரிமையும் , பாதுகாப்பையும் உறுதி படுத்த வேண்டும் .

எவனோ கட்டிய தாலி கயிற்றுடன் நான்கு சுவற்றுக்குள் ...

என்னிடம் எந்த அதிகாரமும் 
இல்லாத போது 
முடிவெடுக்கும்  அதிகாரம் 
மட்டும் எப்படி 
என்னிடம் இருக்கும் ...?

ஆணாக பிறந்திருந்தால் 
அதிகாரம் என் கையில் 
இருந்திருக்கும் என்ன செய்ய ...?

நன் உண்பது 
நன் உடுப்பது 
எல்லாம் என் தந்தை 
விருப்பத்திலேயே ...

எல்லாவற்றையும் 
கேட்ட மனசு 
எப்படியோ உன்னை மட்டும் 
என் அப்பாவிடம்  கேட்காமலேயே
ஆசைபட்டுவிட்டது   ...

எனக்கான 
எல்லாவற்றையும் 
தீர்மானித்துவிட்டு 
எல்ல்லாம் விதிபடிதானே
நடக்குமென சாக்கு ...

விதி 
ஆண்மைகள் ஒன்றிணைந்து 
அழகாக ஜோடித்து வைத்த
உயிர் அற்ற 
பிசாசு ...

எவனோ 
கட்டிய தாலி கயிற்றுடன்
நான்கு சுவற்றுக்குள் ...

படுக்கையறை முழுக்க 

உன் 

நினைவுகள் ...

                                                                                         - சுரேஹா 

உங்கள் ஆண்மை எங்களை காப்பாற்றவும் இல்லை...

கற்பும்
வீரமும்
காயடிக்கப்பட்ட
எங்கள் தேசத்தில்

முள் வேலிகளுக்குள்
கரு அறுக்கப்பட்டு வருகிறோம்

மஞ்சள்மா மேனி  என்று - இனி
யாரும் எங்களை
வர்ணிக்க   முடியாது

எங்கள் தேசத்தில்
உயிர் விடும்
கடைசி மனிதன்  கூட
மறக்க மாட்டான்
தமிழகத்தின் துரோக்கத்தை ...

கற்பழிக்கப்பட்ட நாங்கள்
வாழ்வதா ?

மடிவதா ?

உங்கள் ஆண்மை 
எங்களை
காப்பாற்றவும் இல்லை...

உங்கள் கற்பு பேதம்
எங்களை
வாழவும் விடவில்லை ...


                                                                                                                          - சுரேஹா

 
 
 

இரண்டாவது முறையாக தாயின் கருவறையைப் பார்க்க போகும் பூரிப்பு ...

வளர்ந்திருந்த முடிகள் 
மழித்தாகிவிட்டது
உயிர் மட்டும் 
மிஞ்சி இருக்கிறது ..

உன் முத்த சுவடுகள் 
பதிந்திருந்த இடத்தில 
இப்போது சிகரெட் 
சுவடுகள்...

மீசை முடிகளில்
ஒன்றிரண்டு 
நரை தட்டிவிட்டது...

ஆறு ஆண்டுகளுக்கு முன் 
நீ அனுப்பிய 
முகவரியில்தான் இப்போதும் 
இருக்கிறாயா...?


பச்சை குழந்தையாகி 
அள்ளி முத்தமிடுகிறேன் 
தாய் மண்ணை 

இரண்டாவது முறையாக 
தாயின் கருவறையைப்  
பார்க்க போகும் 
                                                                                                            பூரிப்பு ...

                                                                                                            கல்லறைக்குள் 
                                                                                                            நீ..                                                                                       
- சுரேஹா  
  

காதலிக்க கூடதென்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்தேன்

நீ 
என்னோடு  
பேசிய வார்த்தைகளுக்கு 
உயிர் ஊட்டி 
பூக்களாய் வளர்த்து 
வைத்திருக்கிறேன் 
என் வீட்டுத் தோட்டத்தில்  


நீயும் நானும் 
சுற்றி திரிந்த வீதிகளில் 
நான் மட்டும் 
தனியாக 

ஒரே ஒரு முறை 
பார்வையில் 
முழுவதுமாய் 

தீண்டிவிட்டுப்  போகும்
இளசு, பெருசுகளுக்கு 
மத்தியில் 
நீ மட்டும் 

எவனையும் 
காதலிக்க கூடதென்று  
கங்கணம் கட்டிக்கொண்டு  அலைந்தேன் 

உன்னை மட்டும் 
எப்படி ...?                                                                                      சுரேஹா 

இருட்டு அறையில் கம்பிகளுக்கு நடுவில்

மொட்டைத்தலை 
சதைகள் உடைபட்டு  
நிர்வாமாய் 
இருட்டு அறையில் 
கம்பிகளுக்கு நடுவில் 

மாதம் பத்தாயிரம்  என்றான் 
ஏஜென்ட் 
நான்காயிரம் கொடுக்கிறான் 
மலாய்காரன்

கொதி நீரை 
முகத்தில் எறிகிறான் 

என் இதயத்தை 
இந்தியன் ர்லைன்சில்
அனுப்பி வைக்கிறேன் 

கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறது..
கடிதம் 


அடுக்கு பானையில்
போட்டு விடாதே 

முகவரி தெரியாமல் ...
            
                                                                     - சுரேஹா