எவனோ கட்டிய தாலி கயிற்றுடன் நான்கு சுவற்றுக்குள் ...

என்னிடம் எந்த அதிகாரமும் 
இல்லாத போது 
முடிவெடுக்கும்  அதிகாரம் 
மட்டும் எப்படி 
என்னிடம் இருக்கும் ...?

ஆணாக பிறந்திருந்தால் 
அதிகாரம் என் கையில் 
இருந்திருக்கும் என்ன செய்ய ...?

நன் உண்பது 
நன் உடுப்பது 
எல்லாம் என் தந்தை 
விருப்பத்திலேயே ...

எல்லாவற்றையும் 
கேட்ட மனசு 
எப்படியோ உன்னை மட்டும் 
என் அப்பாவிடம்  கேட்காமலேயே
ஆசைபட்டுவிட்டது   ...

எனக்கான 
எல்லாவற்றையும் 
தீர்மானித்துவிட்டு 
எல்ல்லாம் விதிபடிதானே
நடக்குமென சாக்கு ...

விதி 
ஆண்மைகள் ஒன்றிணைந்து 
அழகாக ஜோடித்து வைத்த
உயிர் அற்ற 
பிசாசு ...

எவனோ 
கட்டிய தாலி கயிற்றுடன்
நான்கு சுவற்றுக்குள் ...

படுக்கையறை முழுக்க 

உன் 

நினைவுகள் ...

                                                                                         - சுரேஹா 

உங்கள் ஆண்மை எங்களை காப்பாற்றவும் இல்லை...

கற்பும்
வீரமும்
காயடிக்கப்பட்ட
எங்கள் தேசத்தில்

முள் வேலிகளுக்குள்
கரு அறுக்கப்பட்டு வருகிறோம்

மஞ்சள்மா மேனி  என்று - இனி
யாரும் எங்களை
வர்ணிக்க   முடியாது

எங்கள் தேசத்தில்
உயிர் விடும்
கடைசி மனிதன்  கூட
மறக்க மாட்டான்
தமிழகத்தின் துரோக்கத்தை ...

கற்பழிக்கப்பட்ட நாங்கள்
வாழ்வதா ?

மடிவதா ?

உங்கள் ஆண்மை 
எங்களை
காப்பாற்றவும் இல்லை...

உங்கள் கற்பு பேதம்
எங்களை
வாழவும் விடவில்லை ...


                                                                                                                          - சுரேஹா

 
 
 

இரண்டாவது முறையாக தாயின் கருவறையைப் பார்க்க போகும் பூரிப்பு ...

வளர்ந்திருந்த முடிகள் 
மழித்தாகிவிட்டது
உயிர் மட்டும் 
மிஞ்சி இருக்கிறது ..

உன் முத்த சுவடுகள் 
பதிந்திருந்த இடத்தில 
இப்போது சிகரெட் 
சுவடுகள்...

மீசை முடிகளில்
ஒன்றிரண்டு 
நரை தட்டிவிட்டது...

ஆறு ஆண்டுகளுக்கு முன் 
நீ அனுப்பிய 
முகவரியில்தான் இப்போதும் 
இருக்கிறாயா...?


பச்சை குழந்தையாகி 
அள்ளி முத்தமிடுகிறேன் 
தாய் மண்ணை 

இரண்டாவது முறையாக 
தாயின் கருவறையைப்  
பார்க்க போகும் 
                                                                                                            பூரிப்பு ...

                                                                                                            கல்லறைக்குள் 
                                                                                                            நீ..                                                                                       
- சுரேஹா  
  

காதலிக்க கூடதென்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்தேன்

நீ 
என்னோடு  
பேசிய வார்த்தைகளுக்கு 
உயிர் ஊட்டி 
பூக்களாய் வளர்த்து 
வைத்திருக்கிறேன் 
என் வீட்டுத் தோட்டத்தில்  


நீயும் நானும் 
சுற்றி திரிந்த வீதிகளில் 
நான் மட்டும் 
தனியாக 

ஒரே ஒரு முறை 
பார்வையில் 
முழுவதுமாய் 

தீண்டிவிட்டுப்  போகும்
இளசு, பெருசுகளுக்கு 
மத்தியில் 
நீ மட்டும் 

எவனையும் 
காதலிக்க கூடதென்று  
கங்கணம் கட்டிக்கொண்டு  அலைந்தேன் 

உன்னை மட்டும் 
எப்படி ...?                                                                                      சுரேஹா 

இருட்டு அறையில் கம்பிகளுக்கு நடுவில்

மொட்டைத்தலை 
சதைகள் உடைபட்டு  
நிர்வாமாய் 
இருட்டு அறையில் 
கம்பிகளுக்கு நடுவில் 

மாதம் பத்தாயிரம்  என்றான் 
ஏஜென்ட் 
நான்காயிரம் கொடுக்கிறான் 
மலாய்காரன்

கொதி நீரை 
முகத்தில் எறிகிறான் 

என் இதயத்தை 
இந்தியன் ர்லைன்சில்
அனுப்பி வைக்கிறேன் 

கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறது..
கடிதம் 


அடுக்கு பானையில்
போட்டு விடாதே 

முகவரி தெரியாமல் ...
            
                                                                     - சுரேஹா


    

கர்ப்ப பையை கிழித்தெறியும் காலம் வந்து விட்டது ...

புத்தக மூட்டைகளை 
சுமந்தாலும் 
விடியவில்லை  வாழ்கை 

ஆடு மாடுகளை போல் 
நாங்களும் ...

கர்ப்ப பையை 
கிழித்தெறியும்
காலம் 
வந்து விட்டது ...

மேற்கே 
உதிக்கட்டும் 
சூரின்...    


                          சுரேஹா  
 

அடுத்த உலக யுத்தம் காத்து இருக்கிறது தண்ணீருக்காக...

அடுத்த 
உலக யுத்தம் 
காத்து இருக்கிறது 
தண்ணீருக்காக...

பூமியின் 
கடைசி சொட்டு 
தண்ணீரை  தேடி 
அலையும்  மனித உயிர்கள் 

வீதியில்  நடந்து  போகும்
ஏழை மனிதனை வெட்டி 
அவன் உடலில்   எஞ்சி இருக்கம் 
தண்ணீரை
பருகிடலாம் ...

நம் குழந்தைக்காகவும்
இப்போதிலிருந்தே 
சேர்த்து வைப்போம் 
நம் 

உமிழ் நீரை ...

                                                                                                              -   சுரேஹா   

சப்பாத்திகள்ளியாக உன் நினைவுகள் ...

வெடி மருந்துகளை
சுவாசித்த
என் நுரையீரல்
துருபிடித்து கொண்டிருகிறது


ஓயாத
துப்பாக்கின்
சத்தத்தை கேட்டு கேட்டு


ஒரு சில
நாட்களில்
நினைவிழந்து  போகலாம்


என்னை மறந்த நிலையில்
இப்போது ...


நீ இருக்கும்
திசை நோக்கி
ஓடுகிறது  கால்கள்


ப்பாத்திகள்ளியாக
உன்
 நினைவுகள் ...




கள்ளி காட்டில்
நீயாவது ...?






                                                                                       - சுரேஹா




      

சொல்லி அனுப்பு காக்கையிடமாவது...

அப்பா 
எங்கே என்று அழுது வடியும் 
உன் குழந்தைக்கு 
வானத்தில் செல்லும் 
விமானத்தை காட்டி
சொல்லி வைப்பேன் 

தினமும் நான்கு முறை  
உன் குழந்தை
'அப்பா' 'அப்பா' வென்று
அழுது வடியும் 


வாரி சுருட்டி வருகிறேன்னு 
காதுல மூக்கில  கெடந்ததையும்
அடகு வச்சி கப்ப ஏறி 
அஞ்சு வருசமாச்சு 

காலு கையோடத்தான்
இருக்கிரியா  ?

சொல்லி அனுப்பு 

காக்கையிடமாவது...  


                                                                                                        - சுரேஹா 
 
 
  

இன்னும் ஒற்றை இரவில் இறந்து விடுவேன்

இன்னும் 
ஒற்றை  இரவில் 
இறந்து விடுவேன் 

கடைசியாக 
ஒருமுறை 
முயற்சித்து பார்க்கலாமென்று 
முந்தி வந்தது 
முதல் மூச்சி காற்று


'நான் தேடி வருகிறேன் 
உனக்கொரு காதலை ' என

சற்று நில் என்பதற்குள் 
பல மைல் துரம் பறந்துவிட்டது
மூச்சி காற்று 

'நான் தேடி வருகிறேன் 
பார்த்து  வருகிறேன் ' என்று
மூச்சி காற்றுகள் 
ஒவொன்றாய் விடை பெற 

மூர்ச்சயகிவிட்டேன்
நான்

வந்து போகின்றன 
கடைசி நினைவுகள் 

தேடி சென்ற 
 மூச்சி காற்றுகள்
திரும்பி வந்து 
இறந்துவிட்டேன் என்று 
என்னை சுற்றி 
ஒப்பாரி   வைக்க  ...


திடுக்கிட்டு 
எழுந்தேன் 
எதிரே ...

தேவதையாய்

  நீ .     


                     சுரேஹா      
 
 



  

 

   

உன் மீசை முடிகளை இனியும் முறுகாதே






நீ 
பார்க்கும் 
முரட்டு பார்வைக்காக
காத்து நிற்கிறேன் 
வெகு நேரமாக 
உயிர் அற்றவளாக 

உன் 
மீசை முடிகளை 
இனியும்
முறுகாதே

பிறகு 
நீ 
இதயம் 
நொறுங்கியவளைதான்

காதலிதாக வேண்டும் ....


                                                                                     - சுரேஹா 


 
 
  

உன் முத்தங்களை ....

என் நரம்புகளை 
பிடுங்கி 
ஒரு பொம்மை செய்து
அனுப்புகிறேன் 
உன் குழ்ந்தை விளையாட


அதில் 
ரெத்தம் சொட்டி கொண்டிருக்கும்
 ஒவ்வொரு சொட்டும் 
உனக்குதான் சொந்தம்


மறவாமல் 
எடுத்துகொள் 
யாரிடமும் சொல்லாத 


                                                                       உன் முத்தங்களை ....



               - சுரேஹா         

'ம் தொடதே '




'ம் தொடாதே  '

ஒரே ஒரு முறை  மட்டும் 
தொட்டு பார்க்கிறான் 
ஆசையாக இருக்கிறது

'வேண்டாம்    தொடாதே '

அம்மாவாசை நிலவை 
உலகில் முதலில் தொட்டவன் 
நானாக இருந்துவிட்டுபோகிறேன்

'வேண்டாம் வேண்டாம்'

எட்டி  பிடித்து  விட்டேன் 
அந்த ஒரு சொட்டு இருட்டை 

அப்பாடி...

அவள் கன்னத்தில் 

மச்சம் ,,,                           
                                                                                                             சுரேஹா